இன்றைய தலைமுறையினர் புதுப்புது செய்கைகளால் தினமும் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில், அசாமை சேர்ந்த மிண்டு-சாந்தி ஜோடி தங்களது திருமணத்தில், மாதம் ஒருமுறை மட்டுமே பீட்சா, தினந்தோறும் சேலை உடுத்துதல், ஜிம் செல்லுதல், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங், தன்னுடன் மட்டுமே இரவுநேர பார்ட்டி, ஞாயிறு கணவர் சமையல் என பல ஒப்பந்தமிட்டு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.