ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகவும் திறம்படவும் செய்ய முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் சத்தான உணவுகளைத் உண்ணும் போது, அந்த உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் முழுவதுமாக உறிஞ்சும். எனவே தான் காலை உணவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்

 அதுவும் ஒருசில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அந்த உணவுகளின் பட்டியலில் சுண்டலும் அடங்கும். அதுவும் சுண்டலை ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுவதுமாக உறிஞ்சப்பட்டு, பல நோய்களின் அபாயம் தடுக்கப்படும். கொண்டைக்கடலை என்று அழைக்கப்படும் சுண்டலில் கருப்பு, வெள்ளை என இரண்டு வெரைட்டிகள் உள்ளன. அதில் கருப்பு சுண்டலில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த கருப்பு சுண்டலை வேக வைத்து சாப்பிடுவதை விட, நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிடும் போது, உடலில் பல மாயங்கள் நிகழும். இப்போது தினமும் காலையில் ஒரு கையளவு ஊற வைத்த சுண்டலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

1. புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் வெஜிடேரியன்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. எனவே இத்தகையவர்களுஙககான புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுப் பொருள் என்றால், அது சுண்டல் தான். அதுவும் சுண்டலை ஊற வைத்து காலையில் எழுந்ததும் ஒரு கையளவு சாப்பிடும் போது, உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்கும். மேலும் இதில் இரும்புச்சத்தும் அதிகம் என்பதால், இரத்த சோகையில் இருந்தும் விடுபடலாம்.

2. செரிமானம் மேம்படும் ஊற வைத்த சுண்டலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை காலையில் தினமும் உட்கொள்ளும் போது, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும். மேலும் இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடலையும், செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நீங்கள் ஏற்கனவே செரிமான பிரச்சனைகளை சந்திப்பவராயின், தினமும் காலையில் ஊற வைத்த சுண்டலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் அஜீரணை கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

 3. இதய ஆரோக்கியம் மேம்படும் ஊற வைத்த சுண்டலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் இருப்பதால், இரத்தம் உறைவதைத் தடுக்கும். இதனால் விளைவாக இதய பிரச்சனைகளின் அபாயம் குறையும்.

 4. எடை இழப்புக்கு உதவும் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் சுண்டல் பெரிதும் உதவும். ஏனெனில் கருப்பு சுண்டலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைத் தவிர, நார்ச்சத்தும் ஏராளமாக இருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி, பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருந்தால், கண்ட உணவுகளின் மீதான ஆர்வம் குறையும். இதன் விளைவாக இது உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது.

5. கொலஸ்ட்ரால் கட்டுப்படும் கருப்பு சுண்டலில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளன. இது பித்த அமிலங்களை பிணைக்க உதவுகிறது மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. முக்கியமாக இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

6. தலைமுடிக்கு நல்லது கருப்பு சுண்டலில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. இவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. மேலும் இதில் உள்ள புரோட்டீன், மயிர்கால்களை வலிமையாக வைத்துக் கொள்ள உதவி புரிந்து, தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது. எனவே உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்ந்தால், சுண்டலை ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிடுங்கள்.

7. ஆற்றல் அதிகரிக்கும் நீங்கள் மிகுந்த உடல் சோர்வை, பலவீனத்தை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு ஊற வைத்த கருப்பு சுண்டலை சாப்பிடுங்கள். இது நாள் முழுவதும் தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்கும். முக்கியமாக தினமும் சுண்டலை உட்கொண்டு வந்தால், உடல் வலிமை அதிகரித்து, பலவீனம் தடுக்கப்படும்.

8. இரத்த சர்க்கரை கட்டுப்படும் ஊற வைத்த கருப்பு சுண்டலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி புரியும். எப்படியென்றால், கருப்பு சுண்டலில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக செரிமானமாகி, இரத்தத்தில் மெதுவாக சர்க்கரையை வெளியிடச் செய்யும். மேலும் கருப்பு சுண்டலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும்.

9. புற்றுநோய் தடுக்கப்படும் தினமும் காலையில் ஒரு கையளவு ஊற வைத்த கருப்பு சுண்டலை உட்கொண்டு வரும் போது, அதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.  10. சருமம் பொலிவு பெறும் நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது அப்படியே நம் முகத்தில் பிரதிபலிக்கும். நீங்கள் தினமும் காலையில் ஒரு கையளவு ஊற வைத்த கருப்பு சுண்டலை உட்கொண்டு வந்தால், அது சரும பிரச்சனைகள் வருவதைத் தடுப்பதோடு, சரும பொலிவை அதிகரிக்கும்.