பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் டுவிட்டர் இன்னும் பணத்தை இழக்கிறது. நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும் என்றார்.