
பெங்களூருவின் குஜ்ஜங்கி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வரும் ஜிதேந்திரா – ராஜகுமாரி தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் சாலு என்ற மகளும், ஹிமாம்சோ என்ற மகனும் கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவன் தவறி உள்ளே விழுந்தான். உடனடியாக வீட்டில் இருந்து லைப் ஜாக்கெட்டைப் போட்டு கிணற்றுக்குள் குதித்த சாலு, தம்பியைக் காப்பாற்றினார்.