கொல்லி மலையில் உள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மிகவும் பிரபலமானது. ஆனால், பலராலும் அறியப்படாத, ‘நம்ம அருவி’ இங்கு ஒளிந்துள்ளது. கொல்லி மலையில் இருந்து 12 கிமீ தொலைவில் அதிக ஆர்ப்பரிப்பு இல்லாமல் இதில் தண்ணீர் கொட்டும். நண்பர்கள், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க, குதூகலிக்க பெஸ்ட் சாய்ஸ். இங்கு, மூலிகை தோட்டம், அன்னாசி பழத்தோட்டத்தை பார்த்து ரசிக்கலாம்.