குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் நோட்டு, புத்தகங்கள், இனிப்புகள் வழங்கினர்-. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் எஸ்.மதிவாணன், துணை தலைவர் பி.பழனி, செயலாளர்கள் ஏ.ஏ.முருகேசன், எஸ்.லியாகத்தலி பொருளாளர் ஆர்.மோரீஸ், அறக்கட்டளை தலைவர் ஆ.ராமஜெயம், செயலாளர் பி.இளையராஜா, பொருளாளர் எஸ்.டி.சேகர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.