குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமஜெயம் மற்றும் சங்க நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அணிவித்தனர். மேலும் ஜமீன் ராயப்பேட்டை அரசு பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசாக ஊக்கத்தொகை அளித்தனர். விழாவில் எஸ்.மதிவாணன், ஆர்.மோரீஸ், டி.எஸ்.முருகன், என்.எஸ்.பி.சங்கர், எஸ்.டி.சேகர், எஸ்.முருகேசன், வெற்றிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.