கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாக மறுசீரமைப்பு கூட்டம் (11.07.2023) குரோம்பேட்டையில் சி. கோவிந்தராஜ் (சி. கோவிந்தராஜ் பில்டர்) தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் செயலாளர் எஸ்.யுவராஜ், பொருளாளர் எஸ்.ஜெகதீசன், துணைத்தலைவர் ழி.சிதம்பரேஸ், அமைப்புச் செயலாளர் ஏ.வெற்றிச் செல்வன், உள்ளிட்ட மற்ற முக்கியமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அதேபோன்று குரோம்பேட்டை கிளை ஒன்று புதிதாக துவக்கப்பட்டு அதற்கும் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.