தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இதில் சேலம் மாணவி கிருத்திகா, விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை மாணவர் சூர்ய சித்தார்த் 2வது இடமும் சேலம் மாணவர் வருண் 3வது இடமும் பிடித்துள்ளனர்.