கனமழையால் டில்லியில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நல்வாய்ப்பாக நேற்று மதியத்தில் இருந்து யமுனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும், பல இடங்களில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். டில்லியில் இயல்பு நிலை திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.