அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுள்ளது. அதன்படி டெல்லி அரசின் நிர்வாக பணிகள் தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதில் அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருப்பதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சந்திரா நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.
எனவே பெங்களூரு கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பது உறுதியாகி உள்ளது.