
டில்லியை சேர்ந்த அருண் குமார் மெஹர் என்பவர் அமேசானில் ரூ.90,000க்கு நவீன கேமரா லென்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு பார்சல் டெலிவரியானது. அதை திறந்து பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தார். அதில் கேமராவுக்குப் பதிலாக ரூ.300 மதிப்பிலான சீமைத் தினை இருந்தது. இதனால் தனது பணத்தை அமேசான் திருப்பித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.