
அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் கூட்டணியில் ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது ‘அநீதி’ திரைப்படம். இந்நிலையில், “இத்திரைப்படத்தின் கதை ஒரு பிரபலமான சாக்லெட் விளம்பரத்திலிருந்து உருவானது. சாக்லெட் சாப்பிடும் இளைஞன் எதுவும் செய்யாமலிருந்து மூதாட்டியை காப்பாற்றுவார். இது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இதை வைத்தே இந்த திரைப்படத்தை எடுத்தேன்” என இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.