சுதந்திர போராட்ட தியாகி மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு குரோம்பேட்டை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அனபரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவரது காலில் விழுந்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில் : சங்கரய்யாவின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவரது வாழ்த்தை பெற்றுக் கொண்டோம்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாபெரும் தலைவர் அவர் 102வது வயது வரை உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டோம் அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய தொண்டை ஆற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
முதலமைச்சர் மதுரைக்கு சென்று விட்டதால் அவரால் இன்று வர முடியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.