மணிப்பூர் மாநில இனக்கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய, மணிப்பூர் பாஜக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் தாம்பரம் பேரூந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் முருகன், மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், விடுதலைச்சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தேவ.அருள்பிரகாசம், தேசிய முஸ்லிம்லீக் மாவட்டதலைவர் அக்பர், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சியினர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.