வட மாநில கூலி தொழிலாளி பிரம்மா(23), சென்னை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது, மற்றொரு பகுதியில் மரபெட்டியில் ஆணியை அடிக்க பயன்படுத்தும் எந்திரத்தில் இருந்து இரும்பு ஆணி பிரம்மாவின் பின்னந்தலையில் பாய்ந்துள்ளது.
இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைகாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், சி.டி இமேஜிங் என பல்வேறு நவீன பரிசோதனைகள் செய்ததில் பின்னந்தலையில் பாய்ந்த ஆணியின் 2 அங்குலம் வரை தலையும், தண்டு வடம் இணைப்பு பகுதியில் பாய்ந்த நிலையில் இருந்தது. மேலும் ஒரு நூல் இழை பாய்ந்து இருந்தாலும் அவரின் மூலை செயல்பாடோ அல்லது கை கால்களின் செல்பாடோ பாதிக்கும் நிலை ஏற்படும்.
பாய்ந்த அணியில் தூண்டில் முள் போன்ற அமைப்பும் உள்ளதால் பின்நோக்கி எடுத்தாலும் நோயாளியின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் அன்புசெழியன் தலைமையில் மருத்துவ குழுவினர் 6 மணிநேர அறுவைசிகிச்சையில் தண்டுவட எலும்புகளை கரைத்து ஆணியை அகற்றி கூலி தொழிலாளி காப்பாற்றினார்கள்.
இதனையடுத்து ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் மருத்துவர். இளங்குமரன் நோயாளிக்கு வாழ்த்துகளையும், மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.