தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாநில தீயணைப்பு பயிற்சி மையத்தில் புதிய தீயணைப்போருக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி துவங்கபட்டது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள 120 தீயணைப்போருக்கு நியமன ஆணையை வழங்கி அவர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சியினை துவக்கி வைத்தார். மேலும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அலுவலர் இருசம்மாளுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.
பின்னர் பேட்டியளித்த இயக்குநர் அபாஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த உள்ளதாகவும், ரோபோட்டுகள் மூலம் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் கூறிய அவர், தலைமை அலுவலகத்தில் பணி ஆணை மற்றும் தகவல் மையம் அமைத்து அதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு பணிகளையும் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இயற்கை பேரிடர் மீட்பு பணிகளில் நாய்களை பயண்படுத்த தற்போது 6 நாய்களுக்கு பயிற்சியளிக்கபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்..