தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் நேரில் பாவையிட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உத்திரவு.
தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தை தடுக்கும் விதமாக 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ நிலத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இதனை தாம்பரம் மாநகராட்சிகான வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் ஐ.ஏ.எஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேற்கண்ட பணிகளை தரமாக குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என பொறியியல் துறையினருக்கும், மாநகராட்சி அரசு ஓப்பந்ததாரர்களிடம் கூறினார்.