தாம்பரம் மார்கெட் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம், 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் முக்கிய குடோன் சீல் வைப்பு மாநகராட்சி சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாம்பரம் மார்கெட் பகுதியில் புழக்கத்தில் உள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல்ரசக் சாலை, முத்துரங்கன் சாலை உள்ளிட்ட வணிக பகுதியில் தீடிர் சோதனை நடத்தப்பட்டது. அதில் 15 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தெரியவந்து அவர்களின் இருந்து 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் குடோனில் பதுக்கிய ராம்தேவ் ஏஜென்சியில் 300 கிலோ பிளாஸ்டிக் கைபைகள் கைபற்றிய நிலையில் அந்த ஏஜென்சியை சீல்வைத்தனர்.