தேவையான பொருட்கள்:
மட்டன்கொத்துக்கறி– 1/2 கிலோ
உருளைக்கிழங்கு– 2 (வேகவைத்துதோலுரித்தது)
எண்ணெய்– 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு– 1 டீஸ்பூன்
பெரியவெங்காயம்– 1 (பொடியாகநறுக்கியது)
பச்சைமிளகாய்– 2 (பொடியாகநறுக்கியது)
கறிவேப்பிலை–சிறிது
இஞ்சிபூண்டுபேஸ்ட்– 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள்– 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்– 1 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா– 2 டீஸ்பூன்
சீரகத்தூள்– 1 டீஸ்பூன்
பச்சைபட்டாணி– 1 கப்
தக்காளிகெட்சப்– 3 டேபிள்ஸ்பூன்
முட்டை– 2
பிரட்தூள்– 2 கப்
உப்பு–சுவைக்கேற்ப
எண்ணெய்–பொரிப்பதற்குதேவையானஅளவு
செய்முறை:
முதலில் மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிசூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒருநிமிடம் நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் கழுவி வைத்துள்ள கொத்துக்கறியை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்மூடிவைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். கொத்துக்கறியில் உள்ள ஈரப்பதம் முற்றியும் ஆவியாகி, கொத்துக்கறி நல்ல ப்ரௌன் நிறத்தில் மாறியதும், சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா, சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு பச்சை பட்டாணி மற்றும் தக்காளி கெட்சப்பை சேர்த்து கிளற வேண்டும். அதன்பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/2 கப்பிரட் தூளை சேர்த்து பிசைய வேண்டும். பிறகு பிசைந்த கலவையில் சிறிது எடுத்து, அதை உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதை முதலில் முட்டையில் பிரட்டி, அதன்பின் பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து கலவையையும் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், கட்லெட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மட்டன் கட்லெட் தயார்.