சென்னை பழைய பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமியை அதே குடியிருப்பு கீழ் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்க்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து தான் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்க்கு சென்றுவிட்டு வருவதாக தனது மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அப்போது அதே குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்திற்க்கு சென்ற செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் அம்மன் நகர் திரிசூலத்தை சேர்ந்த அறுபத்தி மூன்று (63) வயதான ராமமூர்த்தி என்பவர் சிறுமியிடம் பேச்சு கொடுப்பது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இது குறித்து பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து முதியவர் ராமமூர்த்தியிடம் போலீசார் விசாரனை செய்ததில் உண்மையை ஒப்புகொண்டதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.