தி.மு.க.,வினர் சென்னையில் கவர்னர் ரவிக்கு எதிராக, போஸ்டர் ஒட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊழல்வாதிகளை கவர்னர் ரவி காப்பாற்றுவதாக, தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் ரவிச்சந்திரன், சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அதில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், நீதிமன்ற விசாரணை துவக்க, இசைவு ஆணை வழங்கக் கோரி, தமிழக அரசால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு, கவர்னர் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? சட்டத்துறை அமைச்சரின் கடிதத்துக்கு பிறகு, பதில் அளிக்க வேண்டிய.
நிர்ப்பந்தத்திற்கு ஆளான கவர்னர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் மீது விசாரணை துவங்கவே, ஆதாரம் கேட்பது ஏன்? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், நீதிமன்ற விசாரணை இசைவு அளிக்க சட்ட வல்லுனர்களின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக கூறும் கவர்னர், எந்த சட்ட வல்லுனர்களின்
பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை முடியும் முன்னே, அவரைப் பதவியில் இருந்து நீக்க கடிதம் எழுதினார்? ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ., ஆதரவாளராக செயல்பட்டு வந்த கவர்னர், தற்போது அ.தி.மு.க.ஊழல் அமைச்சர்களை காக்கும் வழக்கறிஞராக மாறி விட்டாரா? இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.