நேபாளத்தில் சொலுகும்புவில் இருந்து காத்மண்டுவுக்கு சென்ற ஹலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர்.

காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், லிக்கு பிகே கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் உரசியதில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.