
காரணம் என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா. இவரின் கணவர் அருள்லால். இவர்களுக்கு மோனிகா ஸ்ரீ(18) என்ற மகள் உள்ளார்.
நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் குடும்படுத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது 3 பேர் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.