செங்கல்பட்டில் மதுபானக்கடையில் மது வாங்க வந்தவர்களை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள அன்னபுரம் பகுதியில் ஊர் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடை முன்பு கூடிய குடிமகன்கள் மது பாட்டிலை அதிகப்படியாக வாங்கிச் சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியதால் போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்தனர்.
அப்பொழுது குடிமகன் ஒருவர் ‘என்னங்க ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறாங்க.. காசு என்ன சும்மாவா வருது’ என்று புலம்பிக் கொண்டிருக்க அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் ‘எல்லாரும் போகச் சொன்னா போறாங்க. நீ மட்டும் போகமாட்டியா’ என அவரை தாறுமாறாகத் தாக்கினார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.