பல்லாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது, 5 லட்சம் மதிப்புள்ள 30கிலோ கஞ்சா பறிமுதல் செய்த குன்றத்தூர் மதுவிலக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசர்,
பல்லாவரம் சுற்றுவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவளின் பேரில் ஆய்வாளர் மலதி, உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே 30 கிலோ கஞ்சாவுடன் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சைமன் டிப்பர்மா(32), சஞ்சு டிப்பர்மா(27), ஜெமிஷ் டிப்பர்மா(22) சுரஜ் டிப்பர்மா (32) ஆகிய பேரை பிடித்து விசாரித்த போது பல்லாவரத்தில் பல்வேறு டீ கடைகள், உணவகங்களில் வேலை செய்தவாறு சொந்தவூர் ஊர்க்கு சென்று திரும்போதெல்லாம் பெங்களூரு வழியாக வந்து அங்கு ஆந்திரமாநிலத்தில் இருந்து கொண்டுவந்து பதுக்கிய கஞ்சாவை பண்டல் பண்டலாக ரயிலில் பல்லாவரம் கொண்டுவந்து ஒருவருடத்திற்கு மேலாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் 5 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.