கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஒரு வரலாற்றை உருவாக்கும் வகையில் ,இது வரை தமிழகமே கண்டிராத வகையில் ஒரு எழுச்சியாக மாநாடு நடைபெறுகின்ற நிலையில் நமது அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்,கழகத்தை எந்த கொம்பானாலும் அசைக்க முடியா ஒரு இரும்பு கோட்டை என்ற வகையில் இந்த மாநாட்டிற்கு அலை அலையாய்,குடும்பம் குடும்பமாக வரவேண்டும் என்ற வகையில் இன்றைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இவ்வாறு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : முதலமைச்சர் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று முதல்வர் பேசியுள்ளாரே
பதில் : தமிழ்நாடு அமைதி பூங்கா இல்லை. அமளிப் பூங்காவாக உள்ளது. அம்மாவின் காலத்திலும் சரி.புரட்சித்தலைவர் காலத்திலும் சரி,எடப்பாடியார் ஆட்சியிலும் தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஒரு சாரசரி மனிதன் விரும்புவது என்ன. நிம்மதியான அமைதியான வாழ்க்கை. நிம்மதியான அமைதியான வாழ்க்கை எங்களுடைய கழக ஆட்சியிலே உறுதிப்படுத்தப்பட்டது. காந்தி குறிப்பிட்டதுபோல ஒரு பெண் தன்னந்தனியாக இரவு நேரத்தில் நகைகளை அணிந்துகொண்டு சுதந்திரமாகச் செல்லக்கூடிய நிலை என்றால் அது கழக ஆட்சியில்தான் இருந்தது.ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக உள்ளது. பெட்ரோல் குண்டுகள் கலாச்சாரங்கள் இன்றைக்கு தலை தூக்கியுள்ளது. இத்தனைக்கும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கடலூர் ஐயப்பன் அவர் திருமணத்திற்குச் செல்லும்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.ஐட்ஸ் மிஸ் ஆகிவிட்டார். இல்லை என்றால் அவர் பெட்ரோல் குண்டுக்குப் பலியாகியிருப்பார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதே இன்றைக்கு பெட்ரோல் குண்டு வீசுகின்ற அளவுக்கு நிலைமை இன்றைக்கு மோசமாக உள்ளது என்றால் சாதாரண குடிமக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். வில்லிவாக்கத்தில் கொலை.பெரம்பூரில் கொலை. பத்திரிக்கையை புரட்டினால் முழுக்க முழுக்க கொலை என்றுதான் செய்தி உள்ளது. கொலை கொலையாய் முந்திரிகாய் என்பதுபோல கொலை கொலையாக இன்றைக்கு நடைப்பெற்று வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்விற்குரிய வழியைச் செய்யாமல்,அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டம் செய்ததைத் தொடர்ந்து உடனே ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறார்.இந்த ஆய்வுக்கூட்டத்தை நடத்தினால் என்ன பயன் கிடைக்கும் ஒரு பயனும் கிடைக்கப்போவதில்லை. என் என்றால் யாரும் முதலமைச்சரை மதிப்பது இல்லை. காவல்துறையும் மதிப்பதில்லை.தமிழக மக்களும் மதிப்பதில்லை. ஒரு இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி முழுமையாக அமைதியை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. அந்த கடமையிலிருந்து அவர் பின்வாங்கிவிட்டார். கடமையை நிறைவேற்றவில்லை.தகுதியில்லாத ரிமோட் முதலமைச்சரை,பொம்மை முதலமைச்சரைத் தமிழகம் பெற்றுள்ள காரணத்தினால் சர்வ சாதாரணமாகக் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாத்து,அநியாயங்கள்,அத்துமீறல்கள் போன்றவை இன்றைக்கு தொடர்சியாக நடைபெறக்கொண்டுள்ளது. இந்த ஆட்சியில் மக்களின் நிம்மதி போச்சு. மக்களின் அமைதி பேச்சு.அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
கேள்வி : ராயப்புரம் பகுதியில் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்களே.
பதில் : ராமதாஸ் நகரில் பல வருடங்களாக அடிப்படை வசதியே கிடையாது. அந்த பகுதி பழையபடி ராயப்புரத்தில் இருந்தில்தான் நான் கட்டிக் கொடுத்திருப்பேன். அரும்பாட்டுப்பட்டு நிலத்தை மாநகராட்சியிடமிருந்து குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றி ராயபுரம் பகுதியில் இருக்கின்ற ராமதாஸ் நகர்,பிரிவில் தோட்டம்,பால் டிப்போ,ஆடு தொட்டி இந்த நான்கு பகுதியில் இருப்பவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டவேண்டும் என்று மொத்தம் 1044 வீடுகள்,ஏறக்குறைய 134 கோடி ரூபாய்,4/6.2018 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. அம்மாவின் அரசில் இரண்டு வருடங்களில் கட்டி முடித்தோம். ஆனால் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு அந்த கல்வெட்டை எடுத்துவிட்டு இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துள்ளாராம். இவர்கள் ஆட்சியில் கொண்டுவந்ததுபோல டேபுள் ஒட்டியுள்ளார்கள். எவ்வளவு பெரிய கீழ்தரமான காழ்ப்புணர்ச்சி. கேவலமான அரசியலைச் செய்துள்ளார்கள்.இதனைத் திறக்கவேண்டும் என்றால் 2021 ல் திறந்திருக்கலாம். தேர்தல் வந்த காரணத்தினால் திறக்க முடியவில்லை,.தேர்தல் முடிந்து உடனே திறந்திருந்தால் இந்த இரண்டு வருடங்கள் மக்கள் கஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். இவர்கள் ஏதோ ஜீ பூம்மா போல இவர்கள் உருவாக்கி ஒரு பிரம்மையை ஏற்படுத்துவதற்குத் திறந்துள்ளார்கள்.ராயப்புரம் பகுதி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டதை விட்டுவிட்டு.வெவ்வேறு பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு அளித்துவிட்டுக் காத்திருந்த மக்களுக்கு வீடுகள் இல்லை என்றால் இது எந்த அளவுக்கு நியாயம்.அதனால் அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த விடியா அரசு முற்றுகை போராட்டத்திற்குச் செவி சாய்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.அவர்களிடம் 5 லட்சம் கேட்டால் எப்படி.அவர்களுக்கு வாடகை அடிப்படையில்தான் தருவோம் என்று தெரிவித்திருந்தோம்.அதே அடிப்படையில் அவர்களுக்கு வீடுகளை அளியுங்கள்.
கேள்வி : நேற்று கட்சியிலிருந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் அளித்துவிட்டு மீண்டும் சேரலாம் என்ற அழைப்பு அளிக்கப்பட்டிருந்தது.இது சசிகலாவுக்கும் பொருந்துமா
பதில் : அம்மா காலத்தில் இருக்கும் வழக்கமான நடைமுறைதான் இது.பொதுச்செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் அளித்தார் அதனை அவர் முடிவு செய்வார். ஆனால் அந்த கடிதம் மூன்று பேருக்குப் பொருந்தாது. ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி தினகரன்,சசிகலா இவர்களுக்குப் பொருந்தாது. மற்ற அனைவருக்கும் பொருந்தும்.ஆனால் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்.
கேள்வி செந்தில்பாலாஜியின் நீதிமன்ற நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து
பதில் நீதிமன்ற வழக்கு குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் அதே நேரத்தில் உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும்.தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கவேண்டும். அந்த வகையில் சீட்டிங்,பிராடு 30 கோடிக் கணக்கு வழக்கு எல்லாம் மேற்படி நபருக்குத்தான் தெரியும் என்ற வகையிலே தகவல் அமலாக்கத்துறைக்குப் போய்விட்டு அதன் அடிப்படையில் அதனைத் தோண்ட ஆரமித்து பல பேர் மாட்டுவார்கள் என்ற அடிப்படையில் அவரை அமைச்சர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து இன்றைக்கு அரசு இயங்கிவருகிறது. எலுமிச்சையை முடி மறைக்க முடியும்.பூசணிக்காயை மூடி மறைக்க முடியும்.இமாலய ஊழல் புரிந்தவர்களை மூடி மறைக்க முடியுமா. அமைச்சர் என்ற கவசத்தை வைத்து மூடி மறைக்க முடியுமா. அவரை நீக்கவேண்டும் என்றுதான் எங்கள் கருத்து.ஆளுநரிடம் மனு அளித்தோம். போராட்டம் செய்தோம்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் வழக்குத் தொடுத்துள்ளார். அவருக்குத் தண்ட செலவு செய்துவருகிறார்கள். மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
கேள்வி :ஓ.பன்னீர்செல்வம் மாநாடு குறித்து
பதில் : அவரை பொறுத்தவரை திமுகவின் கைக்கூலி. பொம்மலாட்டம் என்பார்கள்.அந்த பொம்மலாட்ட நூலை திமுக பிடித்துள்ளது. அவர் எப்படி வேண்டுமானாலும் தலையாட்டி வருவார். கழகத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள்.அதனால் எந்த களங்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கட்சியை இதுபோன்ற செயல்களால் வீழ்த்த முடியாது.
கேள்வி : பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கியுள்ளதே
பதில் : அதனால் என்ன இப்போது.தமிழக மக்கள் தேர்தல் எப்போது வரும் என்று கொதித்துபோயியுள்ளார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.அவ்வளவு கொடுமை இப்போது நடந்துவருகிறது. விளம்பரத்தை வைத்து பிம்பத்தைக் காட்டிவருகிறார் ஸ்டாலின்.இன்றைக்கு தக்காளியை உங்களால் கண்ணால் பார்க்க முடிகிறதா. சின்ன வெங்காயம் கூட சாப்பிட முடியவில்லை.இஞ்சியும் விலைக்கூடி விட்டது. இஞ்சி இல்லாத ஒரு சமையல்,தக்காளி இல்லாத ஒரு சமையல்,சின்ன வெங்காயம் இல்லாத ஒரு சமையல் என்று அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சமைப்பது குறித்து ஒரு துறையை ஏற்படுத்தப் போகிறார்கள். எவ்வளவு கேவலமாக உள்ளார்கள்.விலை ஏற்றத்தைத் தடுக்க அம்மா காலத்தில் நடவடிக்கை எடுத்தோம். விலை ஏற்றத்தின் போது அந்த அமைப்பின் மூலம் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு அந்த பொருட்களைக் குறைந்த விலையில் அளித்தோம். ஆனால் இவர்கள் டாஸ்மார் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்கள்.இது தேவையா. கடையை மூடுகிறேன் என்று 300 கடையைத் திறந்துள்ளார்கள். காலையிலே குடி என்கிறார்கள்.வேலைக்குச் செல்பவர்கள் காலையில் குடித்தால் தமிழகம் விளங்குமா. குடிக்கு அவரின் அப்பா அடிமையாக்கிவிட்டார்.அது இலை மறைவு காயாக இருந்தது. இப்போது போதையிலே இரு.நாடு எப்படிச் சென்றால் என்ன. நீ அழிந்து போ.உன் குடும்பம் அழிந்து போகட்டும்.என் குடும்பம் மட்டும் நன்றாக இருக்கவேண்டும்.இன்றைக்கு 10 ரூபாய் வசூல் செய்துகொண்டுதான் உள்ளார்கள். அமைச்சர் முத்துசாமி எங்களிடம் இருந்தபோது நன்றா இருந்தார்,அங்குச் சென்றவுடன் எப்படி மாறிவிட்டார் பாருங்கள். அரசியலில் மூத்தவர் அவரை சாராயம் விற்க அனுப்பியுள்ளார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது. சரக்கு அவர் ஒரு ஆய்வுக்கூட்டம் போடுகிறார்.அவர் ஒரு மாடலை உருவாக்குகிறார்.
கேள்வி : நேற்று திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்களே
பதில் : திமுகவில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளது. எரிமலை எப்போது வெடிக்கும் என்பதுபோல உள்ள குமுறல் உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ளது.எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கண்டிப்பாக பல கட்சிகள் அங்கிருந்து இங்கு வரும் வாய்ப்பு உள்ளது. தோற்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.வெற்றி பெறும் எங்களோடுதான் வருவார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.