தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,000 பேர், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 27,000 பேர் என மொத்தம் 40,000க்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை 16ல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.