ஆண்டிஆக்ஸிடண்ட், பாலிஃபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல்பழத்தை சாப்பிட்டால் இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள விட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இயற்கையின் படைப்பாகவே இருந்தாலும் சில உணவுகளை விரும்பிய வண்ணம் எல்லோரும் சாப்பிட முடியாதபடி நம்மை ஆட்கொண்டுள்ள நோய்களும், வாழ்வியல் சூழல்களும் கட்டுப்படுத்தி விடுகிறது. அதிலும், சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்று தனிப்பட்டியலே போடவேண்டியுள்ளது.
தற்போதைய சீசனில் தெருவோரக்கடைகள் முதல்பழமுதிர்நிலையங்கள் வரையில் அனைத்துக்கடைகளிலும் தவறாமல் விற்பனை செய்யப்படும் பழமாக நாவல்பழம் உள்ளது. இதன் ஊதாநிறமே பார்த்தவுடன் இதை சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதுக்குள் விதைத்துவிடும்.
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, வாழை போல எல்லாநாட்களிலும் கிடைக்கும் பழம் என்றால்கூட பரவாயில்லை, இன்றைக்கு இல்லாவிட்டால் வேறொரு நாளில் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால், நாவல் பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. கிடைக்கும்போது சாப்பிடாவிட்டால் அடுத்தசீசன் வரை காத்திருக்க வேண்டும்.
என்னென்னசத்துக்கள்.. ஒருபழம் நம்மனதை கவர்ந்திழுத்தால் மட்டும் போதுமா! அதில் ஊட்டச்சத்துகள் வேண்டாமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். அதை பூர்த்தி செய்யும்வகையில் மாவுச்சத்து, நார்ச்சத்து, சர்க்கரைசத்து, புரதம், விட்டமின்சி, விட்டமின்ஏ, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்டவை நாவல் பழங்களில் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா.? நிச்சயமாக 100 % சந்தேகமேயின்றி சாப்பிடலாம். ஏனெனில் நாவல்பழத்தில், சர்க்கரை அளவிடுகின்ற கிளைசமிக்இண்டெக்ஸ் மிக, மிககுறைவு. அதிகநார்ச்சத்து, ஆந்தோசயனின்ஸ், எலாஜிக் அமிலம் போன்ற சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்தப்பழத்தை ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோய்க்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.
கர்ப்பிணிகள் சாப்பிடலாமா.?கர்ப்பிணி பெண்களுக்கு பலவகையான ஊட்டச்சத்து தேவை என்றநிலையில், அதை பூர்த்தி செய்வதாக நாவல்பழம் உள்ளது. குறிப்பாக விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை நோய்எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? நாவல்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானம் ஆரோக்கியமாக நிகழ பக்க பலமாக அமையும். மலச்சிக்கலுக்கு தீர்வு தரும். இன்னும் சொல்லப்போனால் மலப் பெருக்கியாக செயல்படும்.
ஆண்டி ஆக்ஸிடண்ட், பாலிஃபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல்பழத்தை சாப்பிட்டால் இதயநோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள விட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு தருகிறது.
எந்தவொரு தனிநபரும் நாவல்பழங்களை தடையின்றி எடுத்துக் கொள்ளலாம். மிக மிகுதியாக சாப்பிடும் பட்சத்தில் பல் கூச்சம் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் உண்டாகலாம். ஆகவே மிதமான எண்ணிக்கையில் இதை எடுத்துக்கொள்ளலாம்.