தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் ஜெயின் நகரில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெருகிறது.
இதனால் குடியிப்புகள் முன்பாக தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பிகள் கட்டி கான்கீரிட் அமைக்கும் பணி தாம்பரம் மாநகரட்சி சார்பில் நடைபெறுகிறது.
இதனால் வீடுகளில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் குழாய்கள் அடைக்கப்பட்டு பணிகள் நடைபெருவதால் குடியிப்போர் கழிவறைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முன்பாக தோண்டப்பட்ட பள்ளங்களில் சுவர்கள் சரிந்து விழும் ஆபத்தும் உள்ளதால் பாதிக்கப்படுவதாக தெரிவித்து ஒன்று திரண்ட அப்பகுதியினர் 30க்கும் மேற்பட்டவர்கள் நெமிலிச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்குவந்த சிட்லப்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்தனர்.