எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும்.
சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது. பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான். ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை விரதம் இருந்து வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண்பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். மரண பயத்தை போக்குபவர்.
எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
வழிபாட்டு முறை:- பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாய் மான் தோலில் அமர்ந்து தினம் 1008 வீதம் உரு ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயாசம், சர்க்கரைப்பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும். ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும்.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
meritbet giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
casibom mobil
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş