
பொதுமக்கள் அதிர்ச்சி
தாம்பரம் ஜூலை 11
அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை புகுத்தியுள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று பிரித்து வைத்தால்தான் அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றுவார்கள் என்று கூறிவந்தனர்.
தற்போது 5000 சதுர மீட்டர் அல்லது 50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது அதன்படி மக்கும் குப்பையை அந்த குடியிருப்புகளே உரமாக்கி விற்றுக் கொள்ள வேண்டும். காகிதம் /பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே மாநகராட்சியின் ஊழியர்கள் அகற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொள்ளாத குடியிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி தூய்மை பணி ஊழியர்கள் வர மாட்டார்கள் அந்த குடியிருப்பை சேர்ந்தவர்களே தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். சென்னை போன்ற பெருநகர மாநகராட்சியில் இதை அமல்படுத்தினாலும் புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சியும் இதுபோன்று திட்டத்தை அமல்படுத்துவது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மைக்காக வரி வசூலித்து வரும் நிலையில் குப்பையை அந்த குடியிருப்புகளே அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது .
இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.