சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த அய்யப்பன் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்ற பகுதியில் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகியின் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ அய்யப்பன் அங்கு சென்றார். அப்போது, எம்.எல்.ஏ காரில் இருந்து இறங்கி உள்ளே செல்லும்போது திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
அதில் நல்வாய்ப்பாக அய்யப்பன் உயிர் தப்பினார். பெட்ரோல் குண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் எம்.எல்.ஏ கலந்துகொண்ட நிகழ்வில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.