குரோம்பேட்டை முத்துசாமி நகர், ஆர்.கே.நகர், கணேஷ் நகர், சோமு நகர், கண்ணம்மாள் நகர் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி செயல்படாமல் உள்ளது. 2012 ஆம் ஆண்டு இங்கு பல லட்சம் செலவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டாலும் அதற்குரிய பம்பிங் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு அது செயல்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பாதாள சாக்கடையை பயன்படுத்த முடியவில்லை.இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாகவும் மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோஷம் எழுப்பி துண்டு பிரசுரம் விநியோகித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக சேவகர் வி.சந்தானம் தலைமையில் போராட்டம் நடந்தது. இதை மூத்த குடிமக்கள் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் சேது மாதவன், ஏஜிஎஸ் காலனி ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியாக டாக்டர் பாலு நன்றி கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றார்கள் தாம்பரம் மாநகராட்சி அடிப்படை வசதிகளை செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.