சென்னை தாம்பரம் சானடோரியத்தில் ரயில் தண்டவளாத்தில் 45ந்து வயது மதிக்க தக்க நபர் பொதிகை விரைவு ரயில் மோதியதில் இரண்டு துண்டுகளாக உடல் இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர்.
அதே போல் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும் போது ஐம்பது வயது மதிக்க தக்க நபர் சேது விரைவு ரயில் மோதி உயிரிழந்ததாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரு வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாததால் அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.