தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சியின் சார்பாக புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் விஜயபாரதி, பரிமளா சிட்டிபாபு, கபிலன், ரமேஷ், சிவப்பிரகாசம், சீனிவாசன் மற்றும் தொண்டர்களும், ஆதிமுகவை சேர்ந்த புருஷோத்தமன்எம்.சி உள்ளிட்ட நிர்வாகிகளும், நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.