நிலம், நீர், காற்று, ஆகாயம் என இயற்கையே இன்றைக்கு மாசுபட்டு இருக்கிறது. நம்முடைய தவறான வாழ்க்கை முறைதான் உலகம் மாசுபட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிலம் மாசுபட்டதால் நிலத்தடி நீரும் மாசுபட்டுவிட்டது. நீர் நிலைகளான ஆறுகள் குளங்கள், ஏரிகளில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களும் நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால், பூமியில் இருந்து பெறப்படும் பெரும்பாலான தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போய்விட்டது.

இதன்காரணமாகவே, மக்கள் கேன் வாட்டருக்கு மாறுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது. கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை குடிக்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்ற கேள்வி ஏழலாம்.

கேன் வாட்டர், குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்புகள் பல மடங்கு அதிகம். அதுபோல, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்.ஓ) என்று சொல்லக்கூடிய ஆர்.ஓ நீரை மாதக்கணக்கில் குடித்து வந்தாலும், அதிகபாதிப்பு உடலுக்கு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஆர்.ஓ சிஸ்டம் தண்ணீரில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு உடலுக்கு நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நீக்கிவிடுகிறது. எனவே, ஆர் ஓ வாட்டரை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இருதயக் கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம், தசைபிடிப்பு, கால்சியம் குறைபாடு ஆகிய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில், எந்த நீரைதான் குடிப்பது என்ற உங்கள் குழப்பத்திற்கு, சாதாரணமாக குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். அல்லது குழாய் நீரை, மண் பானையில் ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருட்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும். நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து வீட்டில் வாட்டர் பில்டர் வாங்கி வைத்திருப்பதை காட்டிலும், நாற்பது ரூபாய் செலவில், ஒரு மண் பானையை வாங்கிக் வைத்துக் கொள்வது நல்லது.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
meritbet giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
casibom mobil
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş