
மாடம்பாக்கம் ஆனந்தி இட்லி கடை சால்னாவில் கரப்பான் பூச்சி பரபரப்பு வீடியோவால் உரிமையாளர் தலைமறைவு மாடம்பாக்கத்தில் உள்ள பிரபல இட்லி கடையில் வாங்கிய சால்னாவில் கரப்பான் பூச்சி இருந்ததை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் தலைமறைவு ஆனார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலை சுதர்சன் நகர் பகுதியில் பிரபல ஆனந்தி சைவ உணவகம் இயங்கி வருகிறது.
இவர்களுக்கு மேடவாக்கம், கேம்ப் ரோடு உட்பட பகுதிகளில் கிளைகளும் உள்ளன.
இந்த உணவகத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் புரோட்டோ மற்றும் புரோட்டாவிற்கு ஊற்றி சாப்பிடும் குழம்பு என்ற சொல்லப்படும் சால்னா ஆகியவற்றை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
தான் வாங்கி வந்த குழம்பு பார்சலை பிரித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிய போது அதில் கரப்பான் பூச்சி இருந்தை பார்த்து அதிர்ச்சடைந்தார் உடனடியாக அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்பு ஆனந்தி சைவ உணவகத்திற்கு ரேடியாக சென்று உரிமையாளரிடம் காட்டி கேட்டபோது இதெல்லாம் யாரும் தெரிந்தே செய்யவில்லை என அலட்சியமாக பதில் அளிக்கும் வீடியோவும் பதிவு செய்து இனைய தளங்களில் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அதிகாரிகளுக்கு பயந்து உரிமையாளர் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.