
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் அழைத்துச் செல்வது வழக்கம் இந்நிலையில் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பு பழுதான நிலையில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள சர்வீஸ் சென்டரில் வாகனத்தை சரி செய்வதற்காக கொடுத்திருந்த நிலையில் இன்று வாகனம் சரி செய்யப்பட்டு சர்வீஸ் சென்டரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் எடுத்துச் செல்வதற்காக டிரைவர் பார்த்திபன் வாகனத்தை கிஸ்கிந்தா சாலையில் ஓட்டிச் சென்றார்.
அப்போது திடீரென வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்டு நிறுத்திய அவர் இறங்கியவுடன் புகை நெருப்பாக மாறி மளமளவென எரியத் துவங்கியது.
இதில் இருக்கைகள் மற்றும் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமானது இந்நிலையில் பொதுமக்கள் தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால் தாம்பரம் தீயணைப்பு துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தாம்பரம் கிஸ்கிந்தா சாலையில் இரு பகுதியிலும் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.