கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு 40 குறைந்து, ₹80 மற்றும் ₹90க்கு விற்பனை!
நேற்று ₹130க்கு விற்பனையான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி.
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ₹100க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ ₹100 வரை குறைந்துள்ளது. ஒரே நாளில் கிலோ ₹40 வரை குறைந்திருப்பதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் மற்ற காய்கறிகளின் விலை குறையாமல் உள்ளது.