
சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிகளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதையடுத்து அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதைத்தொடா்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளா்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பிறகே தங்களுடையை மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும்.
மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு தினமும் ஒரு லிட்டா் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.