தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுகம்பாள உடனுரை ஸ்ரீ தேனுபுரீசுவரர் திருக்கோயில் உள்ளது, 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பிறக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 29ம் தேதி கணபதி பூஜையூடன் துவங்கிய நிலையில் யாகசாலை பூஜைகள் நட்சிபெற்று, புனித நீரை சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில்
மூலவரின் கோபுர கலசம் உள்ளிட்ட அனைத்து கலசங்களுக்கு குடகுழுக்கு நடத்தப்பட்டது.

இந்த குடமுழுக்கு விழாவில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ்,

இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் மா.ஜெயா, உதவி ஆணையாளர் பொ.இலஷ்மிகாந்த பாரதிதாசன், மாமன்ற உறுப்பினர்கள் அ.நடராஜன், தேவேந்திரன், வாட்டர்ராஜ், கற்பகம் சுரேஷ், ஜோதிகுமார், மதுரப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட பள்வேறு முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ தேனுபுரீசுவரர், ஸ்ரீ தேனுகாம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அளங்காரம் செய்யப்பட்டு தீபாரதனைகள் செய்யப்பட்டது.

மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது, இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், காவல் துறை, ஊர்காவல் படையினர், தீயணைப்பு துறையினர், தாம்பரம் மாநகராட்சி பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்படுத்தப்பட்டவர்கல் பணியாற்றினார்கள்.