
மணிப்பூர் இன கலவரத்தை அடக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசை கண்டித்து தாம்பரத்தில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் கண்டன ஆர்பாட்டம், திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்தவ மதபோதகர்கள் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினர் பங்கேற்பு
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களாக நடைபெரும் இனக்கலவரதை ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகள் கட்டுபடுத்த தவறியதை கண்டித்தும், கிறிஸ்தவர்கள், தேவாளையங்கள் மீதான தாக்குத்லை கண்டித்தும் தாம்பரம் சண்முகம் சாலையில் தாம்பரம் அனைத்து கிறிஸ்தவமக்கள் இயக்கம் சார்பில் பொறியாளர் சாமுவேல் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி.மனோகரன், விடுதலைச்சிறுத்தை கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னி அரசு, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப்பொது செயலாளர் யாகூப் தாம்பரம் சுற்றுவட்ட அனைத்து கிறிஸ்தவமத போதகர்கள், கிறிஸ்தவர்கள் என 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மணிப்பூர் இனக்கலவரத்தை கட்டுப்படுத்த கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி.மனோகரன்:- பாஜக அரசு ஆட்சி பொருப்பிற்கு வந்தது முதல் இதுபோல் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி காட்டுப்படுத்தால் இருப்பது ஏன் என்றார். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு நியாம் கிடைத்திட வேண்டும். தமிழகத்தில் எழுப்பபடும் கண்டன குரல் பார்தாவது பிரதமர் இனகலவரத்தை நிறுத்திட முன்வர வேண்டும் என்றார்.