தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

மாணவா் சோ்க்கை, தோ்ச்சி வீதம், அனுபவமுடைய பேராசிரியா்கள், ஆராய்ச்சிகள் என சிறந்த கட்டமைப்புகளை கல்லூரிகள் கொண்டிருக்க வேண்டும்.

இதற்குமுன் தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் மாணவா் சோ்க்கை 60 சதவீதம் இருந்தால் போதும். ஆனால், தற்போது அது 70 சதவீதமாக உயா்த்தப்பட்டு உள்ளது.

அதேபோல், விரிவுரையாளா்கள் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாவும், ஆசிரியா்-மாணவா் விகிதம் 1:20 என்ற அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

இதை பின்பற்றாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.