
டிபன் கடையில் கத்திமுனையில் மிரட்டி 3 ஆயிரம் பணம் பறித்த 4பேர் கைது. பட்டாகத்திகள், இருசக்கர வாகனம் பறிமுதல்
தாம்பரம் அடுத்த படப்பை வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் டிபன் கடையில் கத்தி முனையில் மிரட்டி 3 ஆயிரம் பணம் பறித்து சென்றதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் உதவி ஆனையாளர் ரவி உத்திரவின் பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணையில் ஆரம்பாக்கம் பகுதியில் பதுங்கிய ஏரிவாக்கம் விஷ்ணு(21), ஆதனஞ்சேரி விக்னேஷ்குமார்(22), கரசங்கால் தினேஷ்(24), ஏகாடூர் நாலு (எ) சூர்யா ஆகிய நான்கு பேரை கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து 5 பட்டாகத்திகள், இரண்டு இருசக்கர வாகனத்தை பரிமுதல் செய்து, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.