வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள்.
அதன்பின், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை, வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 17ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
அக்டோபர் 17 முதல், நவம்பர் 30 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் மீது வரும் டிசம்பர் 26ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.