வண்டலூர் அடுத்த ரெத்தினமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 61.5 செண்ட் நிலத்திற்கு பட்டா திருத்தம் செய்ய வருவாய் துறையில் மனுசெய்தார்.
இது குறித்தான மனு மீது நடவடிக்கை எடுக்க வண்டலூர் வட்டாட்சியர் மூலம் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமாருக்கு அனுப்ப பட்டது, இந்த நிலையில் அந்த ரவிசந்திரனிடம் தொடர்பு கொண்ட தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் முது நிலை ஆய்வாளர் ராஜா, பட்டா திருத்தம் செய்திட கோட்டாட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட கோப்பு காண்பித்து 28.6..2023 அன்று 20 ஆயிரம் லஞ்சம் பெற்றார்.
மேலும் உத்திரவு பெற 30.6.2023 அன்று ரவிசந்திரன் மீண்டும் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது ராஜா மீண்டும் 20 ஆயிரம் கொடுத்தால் கோட்டாட்சியர் உத்திரவு தருவதாக கூறினார். இதற்கு விருப்பம் இல்லாமல் பின்னர் தருகிறேன் என ரவிச்சந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் அதனையடுத்து மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் மை தடவி கொடுத்த ரூபாய் தாள்களை ராஜா கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். மேலும் தருந்த சாட்சியங்களுடன் விசாரித்த நிலையில் அவரை கைது செய்து நிதிபதி முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இது சம்மந்தமாக ராஜாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடைபெரும் என கூறப்படுகிறது.
லஞ்சம் பெருவதே குற்றம் என்கிற நிலையில் கோட்டட்சியரின் ஒப்புதல் கோப்பு காண்பித்து 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற நிலையில் அதன் உத்திரவுக்கும் மீண்டும் 20 ஆயிரம் பெற முயன்ற கோட்டாட்சியரின் தனி உதவியாளரான முதுநிலை வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைதான நிகழ்வு பெரும்பரபரபை ஏற்படுத்தியுள்ளது.