.

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நரிக்குறவர்கள் காலணி உள்ளது, இங்கு 250 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடியிருவரும் நிலையில்,

நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து இந்த கல்வி ஆண்டிலேயே கல்வி கற்கும் நரிக்குறவர் பயன்பெரும் விதமாக அவர்களுக்கு வருவாய்துறை மூலமாக பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தான் இந்த பகுதியில் அதிக அளவு நரிக்குறவர்கள் வசிப்பதால் அவர்களுக்கு சமபந்தி பிரியாணி விருந்துடன் பழங்குடி சான்று வழங்க ஏற்பாடு செய்த நிலையில் ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் தலைமையில் அதற்கான விழா நடைபெற்றது,

இதில் கண்டோன்மெண்ட் பகுதியான ஆலந்தூ தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 300 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கி அவர்களுக்கு சிக்கன் பிரியாணியை பரிமாரி விருந்து படைத்தார்,

மேலும் அங்கு வந்த நரிக்குறவர்கள் தங்களுக்கு குடிநீர், சாலை வசதிகள், பொதுக் கழிப்பிடம் மேம்படுத்திட கேட்ட நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பொதுக்கழிப்பிடத்தை ஆய்வு செய்து மேம்படுத்தி தருவதாவும், அதுபோல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் அவர்களின் அனுமதியுடன் சாலைகளை அமைத்து தருவதாக கூறினார்,

ஒரே நேரத்தித்தில் குடியிப்பு பகுதிக்கே வந்த அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் கேட்டு கிடைக்காமல் அழைகழிக்கப்பட்ட நிலையில் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த சில மாதங்களிலேயே தேடிவந்து ஒரே நேரத்தில் 300 பழங்குடி சான்றுகள் வழங்கப்பட்டதால் நரிக்குறவர்கள் மகிழ்சியில் திளைத்தனர், சிலர் சான்றுடன் செல்பியும், புகைப்படம் எடுத்து கொண்டதும், அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தங்கள் வழக்கப்படி மணிமாலை அணிவித்தும் நன்றி தெரிவித்தனர்,

அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்:-

தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சியால் மத்திய அரசு நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது இதனால் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் நரிக்குறவர்கள் பயனடைவிதமாக அமைந்துள்ளது,

அதனால் தான் இந்த கல்வி ஆண்டிலேயே நரிக்குறவர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ந்து படிக்கவைக்க வேண்டும், பல்வேறு அரசு சலுகைகளை பெற்றிடவேண்டும், எந்த நேரத்திலும் என் வீட்டில் படிப்பிற்காக வரலாம் என கூறியதும் அங்குள்ள நரிக்குறவர்கள் நெகிழ்சியில் ஆரவாரமிட்டு வரவேற்று கைதட்டினார்கள்…