ரஜினிகாந்த் நடத்துனராக இருந்தபோதே நடித்திருக்கிறார் என்று நடிகர் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனவை. அவரது ஸ்டைல், நடை, உடை என அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இதன் காரணமாகத்தான் அவர் இன்றுவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்க்களமாக அமர்ந்திருக்கிரார். மேலும் அவரது வழியை ஃபாலோ செய்துதான் பல நடிகர்கள் இருக்கிறார்கள்

சறுக்கிய ரஜினி: ரஜினிகாந்த்துக்கு சமீபகாலமாக நேரம் சரியில்லை. பெரும் எதிர்பார்ப்போடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அஜித்துக்கு மெகா ஹிட்டுகளை கொடுத்த சிறுத்தை சிவாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து பணியாற்றிய அண்ணாத்த படமும் தோல்வியையே கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வி என்ற நிலைக்கு சென்றார் ரஜினி…..

ஜெயிலர்: எனவே கண்டிப்பாக ஹிட் தேவைப்படும் சூழலில் ரஜினி இருக்கிறார். எனவே இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் இணைந்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் ட்ரோல் செய்யப்பட்டாலும் அவர் ஒரு திறமையான இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே ரஜினியும், லோகேஷும் இணைந்திருக்கும் ஜெயிலர் மாஸ் ஹிட்டடிக்கும்; இந்த வெற்றி ரஜினிக்கு மட்டுமல்ல நெல்சன் திலீப்குமாருக்கே அவசியமும்கூட……

முடிந்த ஷூட்டிங்: ஜெயிலரில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் தவிர தமன்னா, மாரிமுத்து உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்து மற்ற பணிகளும் தொடங்கி ப்ரோமோஷனும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது.

மாரிமுத்து பேட்டி: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் படத்தில் நடித்தபோது ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் ரஜினிகாந்த் நடத்துனராக இருந்தபோது ஒரு நாடகம் போடப்பட்டிருக்கிறது. அதில் பீஷ்மராக நடிக்க யாருமே வரவில்லை. இதனையடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் ரஜினியே நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக அமர்ந்திருக்கிறார். அமர்ந்தது மட்டுமின்றி தனது ஸ்டைலான சிரிப்பை காட்டியிருக்கிறார். அப்போது அங்கிருந்த அனைவருமே கைத்தட்டி ரசித்தனர்” என கூறி ரஜினியே இதனை தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார் மாரிமுத்து. மாரிமுத்து: மாரிமுத்து இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராகவும், வைரமுத்துவிடம் உதவியாளராகவும் இருந்தவர். சில படங்களை இயக்கியிருக்கும் மாரிமுத்து தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கிவருவது குறிப்பிடத்தக்கது.