மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’ ஜூன் 29ம் தேதி வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் முதல் நாளில் ரூ.6 கோடியையும், 2வது நாளான நேற்று (ஜூன் 30) 5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக திரைகளில் வெளியான படம் ‘மாமன்னன்’ என்பது குறிப்பிடத்தக்கது.